சென்னை: காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய தொடர் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு (02.10.2026 முதல் 21.10.2026 வரை) பொதுமக்கள் அதிக அளவில் வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி, தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் பயணிகள் உடனடியாகப் புகார் அளிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது.
புகார் அளிப்பதற்கான விவரங்கள்:
- தொலைபேசி எண்கள்:
- 9384808333
- 1800 425 6151 (கட்டணமில்லாத் தொலைபேசி எண்)
- மின்னஞ்சல் முகவரி (Email): tc.tn@nic.in
பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

