விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா (ஹேமாவதி) மாயமாகி 40 நாட்களைக் கடந்தும் எந்தத் துப்பும் துலங்காத நிலையில், சிறுமி பத்திரமாக மீட்கப்பட வேண்டி சத்தியமங்கலம் காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு யாகம் நடத்திய காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபு அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆய்வாளர் தனது மனைவி மற்றும் சக காவலர்களுடன் சேர்ந்து புரோகிதர்களைக் கொண்டு காவல் நிலையத்திற்குள் யாகம் வளர்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, காவல்துறையின் இயலாமையையும் விதிமீறலையும் சுட்டிக்காட்டிப் பொதுமக்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த விவகாரம் உயரதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதைத் தொடர்ந்து, விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் ஆய்வாளர் சுரேஷ் பாபுவை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, சிறுமி மாயமான மர்ம முடிச்சை உடைக்க சிபிசிஐடி தனிப்படை போலீசார் 8 கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Trending
- “செஞ்சி சிறுமி மாயம்.. காவல் நிலையத்திற்குள் ஹோமம் நடத்திய அதிகாரி அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம்!”
- “எந்த கடிதமும் திருக்கோவிலுக்கு வழங்கவில்லை!” – திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ஸ்தானிக பட்டர்கள் பரபரப்பு அறிக்கை!
- “சித்ரவதை செய்தே கொன்றனர்! ஸ்டேஷனில் இருந்த அத்தனை பேரையும் கைது பண்ணுங்க!” – செக்கானூரணி காவல் நிலைய மரண வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி!
- “சர்வே கல்லை தீபத்தூண் என அடம் பிடிக்காதீர்கள்!” – பாஜகவின் பி.எல். சந்தோஷுக்கு மாணிக்கம் தாகூர் அட்வைஸ்!
- திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக ரூட் வேறு, தவெக ரூட் வேறு! கோர்ட்டை ஏமாற்றியதால் விஜய் அரசுக்குக் காத்திருக்கும் பேராபத்து?
- “உடனே கலைந்து போங்க.. இல்லாவிட்டால் லத்தியால் அடித்து கலைக்க நேரிடும்!” – திருப்பரங்குன்றம் போராட்டத்தில் பிளக்ஸ் பேனர் காட்டி போலீஸ் அதிரடி எச்சரிக்கை!
- “எனது தரப்பையும் விசாரியுங்கள்!” – தவெக எம்எல்ஏ மீதான வழக்கில் பெண் ஆட்சியர் தரப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு கோரிக்கை!
- உங்களிடம் நீங்களே அன்பு காட்டுங்கள்:

