திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்படாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, நாளை (நவம்பர் 28) மாலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், உள்ளூர் காவல்துறையின் செயல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்துத் திருப்பரங்குன்றம் கோவில், தர்கா மற்றும் ஒட்டுமொத்த மலையின் பாதுகாப்பையும் மத்தியப் பாதுகாப்புப் படையான சிஆர்பிஎஃப் (CRPF) வசம் ஒப்படைக்க ஆணையிட்டுள்ளது. மேலும், கோவில் நிர்வாகத்தைக் கவனிக்க இரண்டு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்ததுடன், முந்தைய இடைக்காலத் தடையை ரத்து செய்து பக்தர்களும் தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ளது. இதனுடன், தர்கா வழிபாடுகளுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கவும், உத்தரவை வேண்டுமென்றே மீறியதாகத் தமிழகத் தலைமைச் செயலாளர் சாய் குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்ட 8 உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் கோவில் அறங்காவலர்களுக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி, தொலைபேசி அழைப்பு விவரங்களுடன் (CDR) வரும் டிசம்பர் 15-ஆம் தேதி நேரில் ஆஜராகவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Trending
- நாளை தீபம்! CRPF பாதுகாப்பு! திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 அதிரடி உத்தரவுகள்!
- “நானா இருந்தா திருப்பரங்குன்றம் பிரச்சனையை அரை மணி நேரத்தில் தீர்த்து வைத்திருப்பேன்” – திருநெல்வேலி கூட்டத்தில் சீமான் பேச்சு!
- நாளை தீபம்! CRPF பாதுகாப்பு! திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 அதிரடி உத்தரவுகள்!
- திருவள்ளூரில் சோகம்: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி; அமைச்சர் நிர்மல்குமார் இரங்கல்!
- தமிழகத்தை உலுக்கிய கோவை 10 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!
- தவெகவுக்கு கோர்ட்டில் டபுள் ஷாக்.. முதல்வர் விஜய் மற்றும் மானாமதுரை எம்எல்ஏ வெற்றிக்கு எதிரான வழக்குகளைத் தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!
- “அங்கு தர்ஹா இல்லையே, அதனால் நீங்கள் தீபம் ஏற்ற மாட்டீர்கள்!” – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி காட்டமான பதிலடி!
- “செஞ்சி சிறுமி மாயம்.. காவல் நிலையத்திற்குள் ஹோமம் நடத்திய அதிகாரி அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம்!”

