சென்னை: தமிழ்நாடு அரசின் iTNT Hub (Tamil Nadu Technology Hub) சார்பில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மிஷின் லேர்னிங் (ML) சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள், காப்புரிமைகள் (Patents) மற்றும் மாதிரி வடிவங்களை (Prototypes) வணிக ரீதியான தொழில்முனைவாக மாற்ற உதவும் “AI-Focused Pre-Incubation Program” (விருப்ப வெளிப்பாடு – EOI) அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் சாத்தியக்கூறுகள் நிறைந்த தொழில்நுட்பக் கருத்துக்களைச் சந்தை வாய்ப்புகளாக மாற்ற இத்திட்டம் வழிவகுக்கிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? (Who Can Apply?)
- AI/ML ஆராய்ச்சியாளர்கள் (AI/ML Researchers).
- பேராசிரியர்கள் தலைமையிலான கண்டுபிடிப்புக் குழுக்கள் (Faculty-led Innovation Teams).
- காப்புரிமை விண்ணப்பதாரர்கள் (Patent Applicants).
- AI சார்ந்த யோசனைகள், முன்மாதிரிகள், அல்காரிதம்கள் வைத்திருக்கும் நபர்கள்/குழுக்கள்.
- காப்புரிமை பெற்றவர்கள் (Published & Granted Patent Holders).
இப்பயிற்சியின் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கும்? (What Will You Gain?)
- யோசனை உறுதிப்படுத்துதல் (Idea Validation).
- தொழில்துறை பயன்பாடுகள் (Industry Applications).
- காப்புரிமை வாய்ப்புகள் (IP & Patent Opportunities).
- தொழில்நுட்ப மற்றும் சந்தை மதிப்பீடு (Technical & Market Validation).
- வணிகமயமாக்கல் வழிகள் (Commercialisation Pathways).
- புதிய தொழில் நிறுவனம் உருவாக்குதல் (Venture Creation).
விண்ணப்பிக்கும் முறை:
இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து அல்லது https://forms.gle/roV82FMC68x5bUrn8 என்ற இணைப்பின் மூலம் தங்களின் விருப்பத்தைப் பதிவு செய்யலாம்.
உங்கள் AI கண்டுபிடிப்புகளை வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனமாக மாற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்!

