மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்ற தேனியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் (42), நவம்பர் 14-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை காவல்துறைக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. லாரி தீப்பிடித்ததில் ரூ.2.56 கோடி மதிப்பிலான ஏலக்காய் மூட்டைகள் மாயமான புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை கூறிய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது முதுகில் ரத்தக் காயங்களும், கழுத்தில் ஊசி குத்திய தடயங்களும் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி அமர்வு, “சட்டவிரோதக் காவலில் வைத்து சித்ரவதை செய்தே பாலகிருஷ்ணனைக் கொன்றுள்ளனர்; இதில் வெறும் பணியிடை நீக்கம் மட்டும் போதாது, சம்பவத்தன்று காவல் நிலையத்தில் பணியில் இருந்த ஆய்வாளர் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை அனைவரும் கைது செய்யப்படத் தகுதியானவர்களே” எனக் காட்டமாகத் தெரிவித்தனர். மேலும், உயிரிழந்தவரின் மனைவி சுதாவைத் தாமாக முன்வந்து மனுதாரராகச் சேர்த்த நீதிபதிகள், சிபிசிஐடி (CB-CID) விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Trending
- “செஞ்சி சிறுமி மாயம்.. காவல் நிலையத்திற்குள் ஹோமம் நடத்திய அதிகாரி அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம்!”
- “எந்த கடிதமும் திருக்கோவிலுக்கு வழங்கவில்லை!” – திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ஸ்தானிக பட்டர்கள் பரபரப்பு அறிக்கை!
- “சித்ரவதை செய்தே கொன்றனர்! ஸ்டேஷனில் இருந்த அத்தனை பேரையும் கைது பண்ணுங்க!” – செக்கானூரணி காவல் நிலைய மரண வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி!
- “சர்வே கல்லை தீபத்தூண் என அடம் பிடிக்காதீர்கள்!” – பாஜகவின் பி.எல். சந்தோஷுக்கு மாணிக்கம் தாகூர் அட்வைஸ்!
- திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக ரூட் வேறு, தவெக ரூட் வேறு! கோர்ட்டை ஏமாற்றியதால் விஜய் அரசுக்குக் காத்திருக்கும் பேராபத்து?
- “உடனே கலைந்து போங்க.. இல்லாவிட்டால் லத்தியால் அடித்து கலைக்க நேரிடும்!” – திருப்பரங்குன்றம் போராட்டத்தில் பிளக்ஸ் பேனர் காட்டி போலீஸ் அதிரடி எச்சரிக்கை!
- “எனது தரப்பையும் விசாரியுங்கள்!” – தவெக எம்எல்ஏ மீதான வழக்கில் பெண் ஆட்சியர் தரப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு கோரிக்கை!
- உங்களிடம் நீங்களே அன்பு காட்டுங்கள்:

