திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக அறங்காவலர் குழு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு, அக்கோயிலில் பரம்பரையாக பூஜை செய்யும் ஸ்தானிக பட்டர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாமல், வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியிருந்த நிலையில், அறங்காவலர் குழுவின் ஒருமனதான தீர்மானமே இதற்குக் காரணம் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஸ்தானிக பட்டர்கள், “மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது குறித்து நாங்கள் எந்தக் கருத்தும் கூறவில்லை; கோயிலுக்கு எந்தக் கடிதமும் வழங்கவில்லை. எங்களைக் கலந்தாலோசிக்காமல் ஊடகங்களுக்கு வெளியிட்ட கடிதத்தில் எங்கள் பெயர்களையும் சேர்த்திருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.
Trending
- “செஞ்சி சிறுமி மாயம்.. காவல் நிலையத்திற்குள் ஹோமம் நடத்திய அதிகாரி அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம்!”
- “எந்த கடிதமும் திருக்கோவிலுக்கு வழங்கவில்லை!” – திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ஸ்தானிக பட்டர்கள் பரபரப்பு அறிக்கை!
- “சித்ரவதை செய்தே கொன்றனர்! ஸ்டேஷனில் இருந்த அத்தனை பேரையும் கைது பண்ணுங்க!” – செக்கானூரணி காவல் நிலைய மரண வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி!
- “சர்வே கல்லை தீபத்தூண் என அடம் பிடிக்காதீர்கள்!” – பாஜகவின் பி.எல். சந்தோஷுக்கு மாணிக்கம் தாகூர் அட்வைஸ்!
- திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக ரூட் வேறு, தவெக ரூட் வேறு! கோர்ட்டை ஏமாற்றியதால் விஜய் அரசுக்குக் காத்திருக்கும் பேராபத்து?
- “உடனே கலைந்து போங்க.. இல்லாவிட்டால் லத்தியால் அடித்து கலைக்க நேரிடும்!” – திருப்பரங்குன்றம் போராட்டத்தில் பிளக்ஸ் பேனர் காட்டி போலீஸ் அதிரடி எச்சரிக்கை!
- “எனது தரப்பையும் விசாரியுங்கள்!” – தவெக எம்எல்ஏ மீதான வழக்கில் பெண் ஆட்சியர் தரப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு கோரிக்கை!
- உங்களிடம் நீங்களே அன்பு காட்டுங்கள்:

