சென்னை: தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் கீழ் இயங்கும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் (EDII-TN), சுயதொழில் தொடங்க விரும்புவோருக்காக “வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் தொழிற்துறை இரசாயனப் பொருட்கள் தயாரிப்பு” குறித்த 3 நாட்கள் கொண்ட சிறப்புப் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
பயிற்சி விவரங்கள்:
- நாட்கள்: அக்டோபர் 06 முதல் 08, 2026 வரை (3 நாட்கள்).
- நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
- பயிற்சி மையம்: EDII-TN, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.
தயாரிக்கப் பயிற்சி அளிக்கப்படும் பொருட்கள்: பிளாக் ஃபினைல் (Black Phenyl), கட்டிங் ஆயில், க்ரீஸ், தொழில்முறை சோப் ஆயில், பைப் கிளீனிங் பவுடர், வாட்டர் டேங்க் கிளீனிங் லிக்விட், டிஷ் வாஷ் சோப், டிடர்ஜென்ட் சோப், டெட்ரால், எஸ்.எஸ். மெட்டல் கிளீனர், கார் பாலிஷ், ஃப்ளோர் கிளீனர், டிஷ் வாஷ் லிக்விட், ஃபேப்ரிக் சாப்ட்னர் மற்றும் ஹேண்ட் வாஷ் லிக்விட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் செய்முறை விளக்கத்துடன் கற்றுத்தரப்படும்.
பயிற்சியின் சிறப்பம்சங்கள் & தகுதிகள்:
- பயிற்சியின் நோக்கம்: பங்கேற்பாளர்கள் சொந்தமாக தொழில் தொடங்குவதற்குத் தேவையான நேரடிச் செய்முறைப் பயிற்சியும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
- தகுதி: 18 வயது நிரம்பிய ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் (குறைந்தபட்சக் கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு).
- விடுதி வசதி: தேவைப்படும் ஆண், பெண் இருபாலருக்கும் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதி வசதி ‘முன்னதாக வருபவருக்கு முன்னுரிமை’ அடிப்படையில் வழங்கப்படும்.

முன்பதிவு மற்றும் தொடர்புக்கு: இப்பயிற்சிக்கு முன்பதிவு கட்டாயமாகும்.
- இணையதளம்: www.editn.in
- தொலைபேசி எண்கள்: 8668102600 / 7806918309 (திங்கள் – வெள்ளி | காலை 10:00 – மாலை 5:45)
சுயதொழில் தொடங்கி வெற்றிகரமான தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
English Summary: Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN), under the MSME Department, Government of Tamil Nadu, is organizing a 3-day training programme

