கடந்த மே மாதம் கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றம் இன்று (நவம்பர் 27) தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 6 மாதங்களாக நடைபெற்ற விசாரணையில் 68 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, 221 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் சூழலில், அனைவராலும் உற்று நோக்கப்படும் இந்த முக்கிய வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்து இன்று இறுதித் தீர்ப்பு வெளியாகவுள்ளது.
Trending
- “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியது சந்தோஷமாக இருக்கிறது; இஸ்லாமியர்கள் யாரும் எதிர்க்கவில்லை!” – ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன் நெகிழ்ச்சி!
- “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அதிர்ச்சியாக உள்ளது!” – திருமாவளவன் கடும் எதிர்ப்பு; மு.க. ஸ்டாலின் விளக்கம்!
- “பெருந்துறை இடைத்தேர்தலில் தவெக வரலாற்று வெற்றி பெறும்!” – அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை!
- “வாங்க.. வாங்க!” – சிஆர்பிஎப் வீரர்களுக்குப் பூத்தூவி, மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்த முருக பக்தர்கள்!
- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்! மலைக்குக் கொண்டு செல்லப்படும் கொப்பரை!
- நாளை தீபம்! CRPF பாதுகாப்பு! திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 அதிரடி உத்தரவுகள்!
- “நானா இருந்தா திருப்பரங்குன்றம் பிரச்சனையை அரை மணி நேரத்தில் தீர்த்து வைத்திருப்பேன்” – திருநெல்வேலி கூட்டத்தில் சீமான் பேச்சு!
- நாளை தீபம்! CRPF பாதுகாப்பு! திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 அதிரடி உத்தரவுகள்!

