சென்னை: தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் (EDII-TN) சார்பில், இளைஞர்கள் சுயதொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் “மொபைல் போன் ரிப்பேர் மற்றும் சர்வீஸ் (Mobile Phone Repair & Service)” குறித்த 3 நாட்கள் கொண்ட சிறப்புச் செய்முறைப் பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
- தொழில்நுட்ப அடிப்படை: மொபைல் தொழில்நுட்பம் மற்றும் ஹார்டுவேர் அடிப்படைகள், சிப் லெவல் சர்வீசிங் (Chip-Level Servicing).
- பழுதுநீக்கல் பயிற்சி: சால்டரிங் மற்றும் மல்டிமீட்டர் மூலம் பழுதுகளைக் கண்டறிதல், மதர்போர்டு வோல்டேஜ் டிரேசிங் முறைகள்.
- ஹார்டுவேர் & சாஃப்ட்வேர்: சார்ஜிங், டிஸ்பிளே, பவர் செக்ஷன் பழுதுகளைச் சரிசெய்தல் மற்றும் நெட்வொர்க்/சாஃப்ட்வேர் தீர்வுகளுக்கான செய்முறைப் பயிற்சிகள்.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
- 18 வயது பூர்த்தியடைந்த ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.
- குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐ.டி.ஐ (ITI) அல்லது பாலிடெக்னிக் படித்த வேலைதேடுபவர்கள், சுயதொழில் தொடங்க விரும்புவோர் மற்றும் ஏற்கனவே மொபைல் சர்வீஸ் செய்யும் நபர்கள் இதில் பங்குபெறலாம்.
தேதி, நேரம் & இடம்:
- நாட்கள்: செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30, 2026 வரை (காலை 10:00 – மாலை 5:00)
- இடம்: சிட்கோ தொழிற்பேட்டை, EDII அலுவலகச் சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600032
கூடுதல் வசதிகள்:
- பயிற்சி வெற்றிகரமாக முடிந்த பின் தமிழ்நாடு அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
- வெளியூர் நபர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விடுதி வசதி (முதலில் வருவோருக்கு முன்னுரிமை).
- முன்பதிவு செய்வது கட்டாயமாகும்.
👉 பதிவு செய்ய: www.editn.in
📞 தொடர்புக்கு: 8668100181 / 9360221280 (திங்கள் – வெள்ளி | காலை 10:00 – மாலை 5:45)

