சென்னை: கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரம் யஷ் நடிப்பில் உருவாகி வரும் “டாக்சிக்” (Toxic) திரைப்படத்திலிருந்து “தடுமாறுதே” என்ற மெலடி பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இப்பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மனதைக் கவரும் வரிகளுடனும் இதமான இசையுடனும் உருவாகியுள்ள இப்பாடலின் லிரிக்கல் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

