சென்னை / புதுடெல்லி: தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் இடையே ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தவும், சரக்கு கையாளும் திறனை உயர்த்தவும் ரூ.4,178 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரயில்வே வாரியம் (Railway Board) நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒப்புதல் அளிக்கப்பட்ட முக்கியத் திட்டங்கள்:
- அரக்கோணம் – ரேணிகுண்டா (3 மற்றும் 4-வது ரயில் பாதை):
- நீளம்: 77 கி.மீ
- ஒதுக்கப்பட்ட தொகை: ரூ. 1,936.46 கோடி
- பயன்: மும்பை – சென்னை அதிவேக இரயில் பாதையின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இத்திட்டம், அரக்கோணம் மற்றும் ரேணிகுண்டா இடையே இரயில் போக்குவர நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும்.
- சேலம் – கரூர் – திண்டுக்கல் (இருவழிப் பாதை திட்டம்):
- நீளம்: 159 கி.மீ
- ஒதுக்கப்பட்ட தொகை: ரூ. 2,241.67 கோடி
- பயன்: மத்திய மற்றும் தென் தமிழகத்தை இணைக்கும் முக்கிய தொழில்வழித் தடத்தில் இரயில்கள் விரைவாகச் செல்ல வழிவகுக்கும்.
தொழில்துறை மற்றும் பொருளாதாரப் நன்மைகள்:
- தொழில்மைய இணைப்பு: திருவள்ளூர் சிட்கோ (SIDCO), ராணிப்பேட்டை சிப்காட் (SIPCOT) மற்றும் அரக்கோணம் சுற்றியுள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளுக்குச் சரக்குப் போக்குவரத்தைச் தடையின்றி விரைவாக மேற்கொள்ள இத்திட்டம் பேருதவியாக இருக்கும்.
- பயண நேரக் குறைவு: கூடுதல் பாதைகள் அமைக்கப்படுவதால் பயணிகள் இரயில்கள் மற்றும் சரக்கு இரயில்களின் வேகம் அதிகரித்து தாமதங்கள் தவிர்க்கப்படும்.
தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் தொழில்வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த உள்கட்டமைப்பு விரிவாக்கம் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது

