தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் ஈ. ராஜா அவர்களுக்கு ஆதரவாக, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது.

இந்த வாக்குச் சேகரிப்பு பணியில், கழக மகளிர் அணி செயலாளர், நாடாளுமன்ற குழு துணை தலைவர் மற்றும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டு, உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக பொதுமக்களிடம் வாக்குகள் கோரினார்.

ராயகிரி பேருந்து நிலையம், டி. ராமநாதபுரம், புளியங்குடி, அருணாச்சலபுரம் மற்றும் வீரசிகாமணி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு உற்சாகமான வரவேற்பையும் ஆதரவையும் வழங்கினர்.

பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தன்னார்வத்துடன் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தது, வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மக்கள் மத்தியில் காணப்பட்ட இந்த பேராதரவு, வரவிருக்கும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும், அத்தொகுதியில் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version