முன்மொழிந்தவர்களை உறுதிப்படுத்த முடியாததால் நடவடிக்கை
கடத்தல் குற்றச்சாட்டு எழுப்பிய ஆதரவாளர்கள்

எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட இருந்த வேட்பாளர் அருண்குமார் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

மனு ஏன் நிராகரிப்பு?
வேட்புமனுவை முன்மொழிந்தவர்களை அதிகாரிகள் உறுதிப்படுத்த முடியாததால், தேர்தல் அதிகாரி மனுவை நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பரபரப்பான குற்றச்சாட்டு
இதனிடையே, அருண்குமாரின் ஆதரவாளர்கள், “அருண்குமார் காணவில்லை; யாரோ கடத்திவிட்டார்கள்” என குற்றச்சாட்டு முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

விசாரணை கோணம்
இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Share.
Leave A Reply

Exit mobile version