சிவகாசி பைரோடெக்னிக்ஸ் பொது வசதி மையம்! 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் தமிழ்நாடு அரசு!
🏢 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27: தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை!
சிவகாசியில் உள்ள பட்டாசு மற்றும் வெடிபொருள் தொழிலைச் சார்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும், தொழிலநுட்பத்தை மேம்படுத்தவும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மானியக் கோரிக்கையில் இப்புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
📌 செய்தியின் முக்கிய அம்சங்கள் (Key Highlights):
- 🏭 விரிவான திட்ட அறிக்கை (DPR):“சிவகாசி வெடிபொருள் பொது வசதி மையம்” (SPCFC) அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report) ரூ.2 கோடியில் தயாரிக்கப்படும்.
- 👨👩👧👦 5 லட்சம் குடும்பங்களுக்குப் பாதுகாப்பு:சிவகாசியில் உள்ள 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு, நிலைத்தன்மை, தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
- 🚀 தொழில்நுட்பப் புத்தாக்கம்:சிவகாசி நகரம், சர்வதேசப் போட்டித்திறன் மிக்க வெடிபொருள் தொழில்நுட்பப் புத்தாக்கம் மற்றும் உற்பத்தி மையமாக மாற்றப்படும்.
- 🇮🇳 தேசிய அளவில் முதன்மை மாநிலம்:வெடிபொருள் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டைத் தேசிய அளவில் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

