காசநோயை விரட்டிய ஊராட்சிகள்: சான்றிதழ் வழங்கி பாராட்டிய ஆட்சியர்!
விருதுநகர், 08.10.2026: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காசநோய் இல்லா இந்தியா இயக்கம் துவக்க விழாவில், காசநோய் இல்லாத ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
ஊராட்சி நிர்வாகங்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் ஒருங்கிணைந்த முயற்சியே இந்த வெற்றிக்குக் காரணம் என்பதை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.
உங்கள் கருத்து: உங்கள் ஊராட்சியும் காசநோய் இல்லாத ஊராக மாற என்ன செய்யலாம்? கமெண்ட்டில் பகிருங்கள்!
