கடன் வசதி உங்களுக்கு கிடைக்கிறதா? வங்கியாளர்களை அழைத்து ஆய்வு செய்த விருதுநகர் ஆட்சியர்
விருதுநகர், 08.10.2026: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து வங்கியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அளவிலான ஆய்வுக் குழுக் கூட்டமாக (District Level Review Committee) நடைபெற்ற இதில், முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் உட்பட பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் மக்களுக்கான வங்கிச் சேவைகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
உங்கள் கருத்து: வங்கிக் கடன் மற்றும் சேவைகளைப் பெறுவதில் உங்களுக்கு ஏதேனும் சிரமங்கள் உள்ளனவா? கமெண்ட்டில் பகிருங்கள்!


