2026-27ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ‘வெற்றி 150’ (Vetri 150) கூடுதல் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • கூடுதல் வேலைவாய்ப்பு: கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்கு மேல் வேலைவாய்ப்பை நீட்டிக்கும் விதமாக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • 150 நாட்கள் வேலை உறுதி: இதன்படி, வழக்கமான வேலை நாட்களில் 125 நாட்கள் வேலையை முழுமையாக நிறைவு செய்துள்ள நலிவுட்ட மற்றும் ஏழை எளிய கிராமப்புறக் குடும்பங்களுக்குக் கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் அந்தக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு முழுமையாக உறுதி செய்யப்படும்.
  • நிதி ஒதுக்கீடு: கிராமப்புற மக்களின் பொருளாதாரப் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட இத்திlடத்தைச் செயல்படுத்துவதற்காக, தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version