சென்னை: பெங்களூரு மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்தை அதிவேகமாகவும், தடையின்றியும் மாற்றும் நோக்கில், ஓசூர் முதல் திண்டுக்கல் வரையிலான ரயில் பாதையை இரட்டைப் பாதையாக (Double Line) மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒமலூர், சேலம், நாமக்கல் மற்றும் கரூர் வழியாகச் செல்லும் இந்த முக்கிய வழித்தடத்தை மேம்படுத்துவதற்காக மொத்தம் ரூ.4,190 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

  • ஓசூர் – ஓமலூர் இரட்டைப் பாதை:
    • 147 கி.மீ தொலைவு கொண்ட இத்திட்டம் ரூ.1,948 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது.
  • சேலம் – கரூர் – திண்டுக்கல் இரட்டைப் பாதை:
    • 159 கி.மீ தொலைவு கொண்ட இப்பாதையை இரட்டிப்பாக்க ரூ.2,242 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பயன்கள்:
    • பெங்களூருவில் இருந்து சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு புதிய ரயில்களை இயக்க வழிவகுக்கும்.
    • ரயில்கள் கிராசிங்கிற்காக நிலையங்களில் காத்திருக்கும் நேரம் தவிர்க்கப்பட்டு, பயண நேரம் கணிசமாகக் குறையும்.
    • தொழில் நகரங்களான ஓசூர், சேலம், கரூர் இடையேயான சரக்கு ரயில் போக்குவரத்து வேகமெடுக்கும்.

Share.
Leave A Reply

Exit mobile version