ஷபாஸ் ஷரிஃப் கோரிக்கைக்கு இணக்கம்
சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு தற்காலிக அனுமதி
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த பதற்றத்திற்கு இடையில், 2 வாரங்களுக்கு தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் ஒத்திவைப்பு
ஈரான் மீது நடத்த திட்டமிட்டிருந்த தாக்குதல்களை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஹார்மூஸ் நீரிணை திறப்பு
இதற்கிடையே, ஹார்மூஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் கப்பல்களும் பாதுகாப்பாக பயணிக்க அனுமதி வழங்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் முயற்சி
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரிஃப் முன்வைத்த கோரிக்கையை ஏற்று இந்த போர் நிறுத்த முடிவு எடுக்கப்பட்டதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
இந்த தற்காலிக ஒப்பந்தம், மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வந்த பதற்றத்தை குறைக்கும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

