பெண்கள் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் குறித்து கேள்வி; தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!
நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது பேசிய உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காட்டும் சுணக்கம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
உதயநிதி ஸ்டாலின் உரையின் முக்கிய அம்சங்கள்:
- மக்களின் எதிர்பார்ப்பு: “அடுத்த மாதம் வரவுள்ள மகளிர் உரிமைத் தொகைக்காகப் பல லட்சக்கணக்கான பெண்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல், அரசுப் பள்ளிக் குழந்தைகளின் பசியைப் போக்கும் காலை உணவுத் திட்டத்தின் நிலை என்ன? மாணவர்கள் அதற்காகக் காத்திருக்கிறார்கள்” எனச் சுட்டிக்காட்டினார்.
- அவகாசமும் எச்சரிக்கையும்: “புதிய அரசு என்பதால் நீங்கள் அவகாசம் கேட்டீர்கள், அதை நாங்கள் வழங்குகிறோம். ஆனால், உதவிக்காகக் காத்திருப்பவர்களை நீண்ட காலம் காக்க வைத்துவிடாதீர்கள்” என அவர் வலியுறுத்தினார்.
- ரீல்ஸ் vs ரியல்: “சமூக வலைதளங்களில் மட்டும் விளம்பரம் தேடிக்கொள்ளும் ‘ரீல்ஸ்’ ஆட்சியாக இது இருந்துவிடக் கூடாது. மக்களுக்கு நேரடியாகப் பலன் தரும் ‘ரியல்’ ஆட்சியை நீங்கள் நடத்த வேண்டும்” என முதலமைச்சர் விஜய்க்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

