சென்னை: பெங்களூருவில் நடைபெற்ற மத்திய பட்டு வாரியத்தின் 77வது நிறுவன தின விழாவில், பட்டுத் தொழிலில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு சாதனையாளர்களுக்கு 2026ஆம் ஆண்டுக்கான தேசிய அளவில் சிறந்த பட்டுத் தொழில் பங்குதாரர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய ஜவுளித் துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் அவர்கள் இவ்விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
விருது பெற்றவர்கள்:
- திருமதி பி. அகல்யா (திருப்பூர்): தனியார் பட்டு முட்டை உற்பத்தியாளர் (Private Grainage).
- திரு. எஸ். கோபாலகிருஷ்ணன் (கோயம்புத்தூர்): இளம்புழு வளர்ப்பாளர் (Chawkie Rearer).
தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்த இரு சாதனையாளர்களுக்கும் தமிழ்நாடு பட்டுவளர்ச்சித் துறை சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

