தமிழக அரசியலில் மற்றும் ஒரு பெரும் நெகிழ்ச்சியான மற்றும் முன்மாதிரியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி தவெக (தமிழக வெற்றிக் கழகம்) எம்.எல்.ஏ இளங்கோவன், தனது மகள் தேவமித்ராவை எவ்வித ஆடம்பரமும் இன்றி திருப்புவணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்துள்ளார்.

பணமும் செல்வாக்கும் இல்லா மக்கள் கூட தனியார் பள்ளிகளை நோக்கி ஓடும் இந்த காலக்கட்டத்தில், மக்கள் பிரதிநிதியான ஒரு சட்டமன்ற உறுப்பினரே தனது பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்த்திருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

“மக்களுக்குச் சேவை செய்ய வந்தவர்கள், மக்கள் பயன்படுத்தும் அரசு கட்டமைப்புகளை முதலில் நம்ப வேண்டும்” என்பதற்கு இளங்கோவன் நிஜ உதாரணமாக மாறியுள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இந்த ஒரு செயல் பல மடங்கு உயர்த்தியுள்ளது என்று பொதுமக்கள் பெருமிதத்துடன் பேசி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version