அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, கல்வி வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முதலமைச்சர் விஜய் அரசு அதிரடி திட்டங்களைத் தீட்டி வருகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனியார் பள்ளிகளில் இருக்கும் எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிஸ் (Extra-curricular activities) மற்றும் ப்ராஜெக்ட் முறைகள் இனி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். மேலும், அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில், முதற்கட்டமாக 5,000 அரசுப் பள்ளிகளில் ஏஐ கோடிங் (AI Coding), பைத்தான் (Python), ஏ.ஆர் (AR) போன்ற அதிநவீன பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
சிறந்த உள்கட்டமைப்பு, நவீன ஆய்வகங்கள் மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நிதி நெருக்கடி முற்றிலுமாகக் குறையும். கல்வி என்ற பெயரில் நடக்கும் கார்ப்பரேட் வியாபாரம் ஒழிக்கப்பட்டு, சமமான கல்வி அனைவருக்கும் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என அமைச்சர் ராஜ்மோகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மக்களே நீங்க என்ன நினைக்கிறீங்க?
ஒரு மக்கள் பிரதிநிதியே தனது பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்த்திருப்பது மற்றும் அரசுப் பள்ளிகளில் ஏஐ கோடிங் கொண்டு வரும் இந்த புதிய கல்விப் புரட்சி திட்டம் பற்றி உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் பண்ணுங்க, இந்த செய்தியை அப்படியே உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!



