| மேஷம் | நட்பால் நன்மையும், தொழில் ரீதியாகத் தொலைதூரச் செய்திகளால் மகிழ்ச்சியும் ஏற்படும் நாள். விவாகப் பேச்சுகள் கைகூடும். |
| ரிஷபம் | தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நிலுவையில் இருந்த பண வரவு கைக்கு வந்து சேரும். கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம். |
| மிதுனம் | யோகமான நாள். தடைபட்ட காரியங்கள் இனிதே முடியும். திருமண வரன்கள் தேடி வரும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். |
| கடகம் | பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதார நிலை உயரும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சலுகைகள் கிடைக்கும். |
| சிம்மம் | வருமானம் உயரும். உறவினர்களிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். புதிய வியாபாரத் தொடர்புகள் ஏற்படும். |
| கன்னி | சுபச் செய்திகள் வந்து சேரும். மாற்றினத்தவர் மூலம் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். |
| துலாம் | பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். |
| விருச்சிகம் | புகழ்மிக்கவர்களின் சந்திப்பு மனதிற்குப் புத்துணர்ச்சி தரும். வருமானம் இரட்டிப்பாகும். நண்பர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு உதவுவர். |
| தனுசு | தொலைபேசி வழித் தகவல்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும். வசூலாகாத பழைய பாக்கிகள் இன்று வசூலாகும். மங்கல நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். |
| மகரம் | சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கை தேவை. புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது. |
| கும்பம் | சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் நிதானம் அவசியம். தேவையற்ற அலைச்சல் மற்றும் செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். |
| மீனம் | மனக்குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனையால் காரிய வெற்றி உண்டாகும். |