🇮🇳 வரலாற்றில் என்றும் அழியாத தமிழ்நாட்டின் தியாகங்கள்!
இந்திய விடுதலைப் போராட்டத்தில் நமது தமிழ்நாடும், தமிழ் மண்ணின் தியாகிகளும் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. பூலித்தேவன், வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், சுப்பிரமணிய சிவா, திருப்பூர் குமரன் என எண்ணற்ற தியாகிகளின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூரும் வகையில் இச்செய்தி அமைந்துள்ளது.
📌 வாழ்த்துச்செய்தியின் சாராம்சம்:
“இந்தியாவின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரையும், உரிமையையும், எதிர்காலத்தையும் தியாகம் செய்தவர்கள் எண்ணிலடங்காதவர்கள்.
அந்த வீர வரலாற்றில், தமிழ்நாடு எழுதிய அத்தியாயங்கள் என்றும் அழியாதவை.
சுதந்திரத்திற்காகப் போராடிய தமிழ்நாட்டின் தியாகிகளுக்கு வீர வணக்கங்கள்!
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!” 💐
அனைவருக்கும் 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்! தாய்நாட்டின் சுதந்திரத்துக்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்த அத்துணை வீரர்களுக்கும் மனமார்ந்த வீர வணக்கங்கள்! 🇮🇳✨

