ஈரோடு மாவட்டம் மாநில அளவில் முதலிடம்; 489 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி!

தமிழகப் பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ள முடிவுகளின்படி, கடந்த ஆண்டை விட (95.03%) இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது. சுமார் 8.27 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முக்கியத் புள்ளிவிவரங்கள்:

  • பாலின வாரியாகத் தேர்ச்சி:
    • மாணவிகள்: 97.00%
    • மாணவர்கள்: 93.19%
    • (மாணவர்களை விட மாணவிகள் 3.81% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்).
  • மாவட்ட வாரியாக முதலிடம்:
    1. ஈரோடு – 98.87%
    2. சிவகங்கை – 98.05%
    3. கன்னியாகுமரி – 97.63%
  • நூறுக்கு நூறு (Centum) எடுத்தவர்கள்:
    • கணிதம் – 732 பேர்
    • வேதியியல் – 632 பேர்
    • உயிரியல் – 784 பேர்
    • தமிழ் – 83 பேர்
  • அரசுப் பள்ளிகள்: தமிழகம் முழுவதும் 489 அரசுப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version