சென்னை: தமிழ்நாடு அரசு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (TNHB), சுயநிதி திட்டத்தின் கீழ் மாநிலத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் புதிய குடியிருப்புத் திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொதுமக்களின் குடியிருப்புத் தேவையை மதிப்பீடு செய்வதற்காகத் தற்போது இணையவழி விருப்பப் பதிவு (Demand Survey) தொடங்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகள் அமையவுள்ள முக்கிய பகுதிகள்:

  • சென்னை மாவட்டம்: அண்ணா நகர், புரசைவாக்கம், நந்தனம் மற்றும் எர்ணாவூர்
  • கடலூர் மாவட்டம்: குண்டுசாலை
  • மதுரை மாவட்டம்: எல்லீஸ் நகர்
  • திருவள்ளூர் மாவட்டம்: திருமழிசை
  • கன்னியாகுமரி மாவட்டம்: வல்லன்குமாரவிளை

பதிவு செய்யும் முறை & குறிப்பு:

  • பொதுமக்கள் தங்கள் விருப்பமான இடம், குடியிருப்பு வகை மற்றும் தொடர்புடைய பிற தேவைகளை அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnhb.tn.gov.in வழியே பதிவு செய்யலாம்.
  • முக்கிய குறிப்பு: இந்தப் பதிவு பொதுமக்களின் தேவையை மதிப்பீடு செய்வதற்காக மட்டுமே. பதிவு செய்தவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும்போது விண்ணப்பத்திற்கான தேதி விவரங்கள் குறுஞ்செய்தி (SMS) மூலம் தெரிவிக்கப்படும். இருப்பினும், இப்பதிவு வீடு ஒதுக்கீடு பெறுவதற்கான எந்தவொரு முன்னுரிமையையும் வழங்காது.
Share.
Leave A Reply

Exit mobile version