சென்னை: “வருமுன் காப்பதே சிறந்தது” என்ற பழமொழிக்கேற்ப, பருவமழை காலத்தில் பரவக்கூடிய டெங்கு காய்ச்சலைத் தடுப்பதில் பொதுமக்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் பெரும் பங்கு உண்டு என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள டெங்கு விழிப்புணர்வு காணொளியை அனைவரும் பார்த்து மற்றவர்களுக்கும் பகிருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெங்குவிலிருந்து தப்பிக்கும் 5 முக்கிய வழிகள்:

  • தண்ணீர் தேங்க விடாதீர்கள்: மேல்நிலைத் தொட்டிகள், வாளிகள் மற்றும் திறந்தவெளிக் கலன்களில் தண்ணீர் தேங்காமல் எப்போதும் மூடி வையுங்கள்.
  • சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வையுங்கள்: பழைய டயர்கள், உரல், தேங்காய் ஓடுகள் மற்றும் கொட்டாங்குச்சிகளில் மழைநீர் தேங்காதவாறு அகற்றுங்கள்.
  • கொசு வலை பயன்படுத்துங்கள்: ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் கொசு வலைகளைப் பொருத்த வேண்டும்.
  • கொசு விரட்டி பயன்பாடு: இரவு மற்றும் பகல் நேரங்களில் கொசு விரட்டிகளைப் (Mosquito Repellents) பயன்படுத்துங்கள்.
  • முழு கை ஆடைகள் அணியுங்கள்: கொசுக்கடியிலிருந்து தப்பிக்க உடலை முழுமையாக மூடும் ஆடைகளை அணியுங்கள்.

“நம் வீடு | நம் தெரு | டெங்கு இல்லாத சமூகம்” என்ற இலக்கை நோக்கி அனைவரும் இணைந்து செயல்படுவோம்

Share.
Leave A Reply

Exit mobile version