சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ், மூத்த குடிமக்களின் நல்வாழ்வு மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
- முதலமைச்சரின் முதியோர் காப்பீடு திட்டம்: 70 வயதிற்கு மேற்பட்ட 38 லட்சம் மூத்த குடிமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் கட்டணமில்லா இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
- முழு உடல் பரிசோதனை: தொற்றா நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், 30 வயதைக் கடந்த அனைவருக்கும் ‘முழு உடல் பரிசோதனை’ (Master Health Check-up) செய்யப்படும்.
- புதிய பொது சுகாதாரச் சட்டம்: தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தப் ‘புதிய தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம்’ விரைவில் இயற்றப்படும்.
- சுய பிரசவம் குற்ற நடவடிக்கை: தாய் மற்றும் சேயின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பின்றி வீட்டில் சுய பிரசவம் (Home Birth) பார்ப்பது சட்டப்படி குற்றம் என்ற புதிய சட்டப்பிரிவு இணைக்கப்படும்.
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தவும், மூத்த குடிமக்களின் மருத்துவச் செலவைக் குறைக்கவும் அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளன.

