மும்பை:

அதிரடியாக ரன்களைக் குவித்து விட்டு விரைவாக விக்கெட்டைப் பறிகொடுப்பதில் அணிக்கு எந்தப் பயனும் இல்லை என்று இந்திய அணியின் இளம் அதிரடி பேட்டர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் தனது பேட்டிங் அணுகுமுறை குறித்துப் பேசிய அவர், களத்தில் நிலைத்து நின்று விளையாடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இது குறித்துப் பேசிய திலக் வர்மா:

“ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி சில சிக்ஸர்களைப் பறக்கவிட்டு உடனடியாக ஆட்டமிழப்பதைத் விட, களத்தில் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு சூழலுக்கு ஏற்ப போட்டியை வெற்றிகரமாக முடித்துத் தருவதே (Finish) அணிக்கு உண்மையான நன்மையைத் தரும். அணியின் தேவைக்கேற்ப பொறுப்புடன் ஆடுவதே ஒரு சிறந்த பேட்டருக்கு அழகு” என்று மனம் திறந்து கூறினார்.

தனது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் தொடர்ந்து தனது இடத்தை உறுதி செய்து வரும் திலக் வர்மாவின் இந்த முதிர்ச்சியான பேச்சு, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version