சென்னை: சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை தலைமை அலுவலகத்தில், மாநில அளவிலான நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கான விரிவான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் தலைமையில் இன்று (22.09.2026) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பணிகளின் முன்னேற்றம், தரம், காலக்கெடுவிற்குள் முடித்தல் மற்றும் கள அளவிலான கண்காணிப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
முக்கிய அறிவுறுத்தல்கள்:
- தரமான உள்கட்டமைப்பு: அரசால் மேற்கொள்ளப்படும் பணிகள் வெளிப்படைத்தன்மையுடனும், உரிய பொறியியல் தரநிலைகளுடனும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர வேண்டும். 3-ஆம் தரப்பு தரத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டு குறைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- பன்னெடுக்கு கட்டடங்கள்: அரசு கட்டடங்களை வெறும் 2 அல்லது 3 தளங்களாகக் கட்டாமல், நில பயன்பாட்டிற்கு ஏற்ப உலகத் தரத்தில் பன்னெடுக்கு (Multi-storey) கட்டடங்களாக வடிவமைக்கக் கொள்கை வகுக்க வேண்டும்.
- டிஜிட்டல் டேஷ்போர்டு (Digital Dashboard): மாநிலம் முழுவதுமுள்ள அரசு கட்டடங்களின் நிலை, பராமரிப்புத் தேவைகள் மற்றும் நிலுவைப் பணிகளை ஒருங்கிணைந்த ‘Digital Dashboard’-ல் பதிவு செய்து கண்காணிக்க வேண்டும்.
- AI & ANPR கேமராக்கள்: சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த வாகன எண் மற்றும் வேகத்தைக் கண்டறியும் AI கேமராக்களை நிறுவி, காவல்துறையின் e-challan அமைப்புடன் ஒருங்கிணைக்க வேண்டும்.
- ரோந்துப் பணி: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைப் போன்று மாநில நெடுஞ்சாலைகளிலும் ரோந்துப் பணி மற்றும் அவசரகால மீட்பு நடவடிக்கைகளைச் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்நிகழ்வில் நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலாளர் திரு. சுன்சோங்கம் ஜடக் சிங், இ.ஆ.ப., பொதுப்பணித்துறை அரசுச் செயலாளர் மரு. இரா. செல்வராஜ், இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


