தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கை 2026-27-இல் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்:
📌 முக்கிய அறிவிப்புகள்:
📋 ரூ. 40 இலட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை (DPR):
தஞ்சாவூர்: சுவாமிமலை & ஒரத்தநாடு புறவழிச்சாலைகள்.
சென்னை: ஓ.எம்.ஆர் – ஈ.சி.ஆர் இணைப்புச் சாலைகள்.
திருச்செங்கோடு: திருச்செங்கோடு – குமாரபாளையம் சாலை மேம்பாலம்.
நாமக்கல் – ஈரோடு: பிளிக்கல்பாளையம் – கொடுமுடி பாலம் சாத்தியக்கூறு ஆய்வு.

🚗 ரூ. 257 கோடி மதிப்பீட்டில் புதிய புறவழிச்சாலைகள்:
நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மயிலாடுதுறை (இணைப்புச் சாலை), பள்ளி கொண்டா, உளுந்தூர்பேட்டை, மற்றும் சிவகாசி ஆகிய நகரங்களுக்குப் புதிய புறவழிச்சாலைகள் அமைக்கப்படும்.

🌾 ரூ. 73.50 கோடி மதிப்பில் நிலம் கையகப்படுத்தும் பணிகள்:
சின்னமுட்டம் துறைமுக இணைப்புச் சாலை மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் நகருக்குப் புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

🎯 திட்டங்களை விரைவுபடுத்த புதிய கண்காணிப்புப் பிரிவு:
நெடுஞ்சாலைத் துறைத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், நில எடுப்புப் பணிகளை ஒருங்கிணைத்துக் கண்காணிக்கவும், முதன்மை இயக்குநர் அலுவலகத்தில் ‘திட்டம் மற்றும் நில எடுப்பு கண்காணிப்புப் பிரிவு’ உருவாக்கப்படும்.

