606 மாணவிகளுக்குக் கூடுதல் வசதிகளுடன் புதிய விடுதி கட்டடம்! TNSHIC நிறுவனம் மூலம் 606 மாணவிகள் பயனடையும் வகையில் நவீன கூடுதல் விடுதி கட்டப்படும் என அறிவிப்பு!

⚖️ தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-2027: சட்டத் துறை!

சட்டக் கல்வியில் பயிலும் மாணவிகளின் தங்குமிடம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தமிழ்நாடு அரசு நவீன கட்டமைப்புடன் கூடிய புதிய விடுதி கட்டடத்தை அறிவித்துள்ளது.

🏗️ செயலாக்கம்: இக்கட்டடப் பணிகள் தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உடகட்டமைப்பு நிறுவனம் (TNSHIC) மூலமாக மேற்கொள்ளப்படும்.

📍 இடம் & பயனாளிகள்: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பெருங்குடி வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் (SoEL) பயிலும் 606 மாணவிகள் பயன்பெறும் வகையில் இக்கட்டடம் கட்டப்படும்.

🏢 நவீன வசதிகள்: மின்தூக்கி (Elevator), தீயணைப்பு சாதனங்கள் மற்றும் 24 மணி நேர சிசிடிவி/பாதுகாப்பு வசதிகளுடன் இக்கட்டடம் உருவாக்கப்படும்.

Share.
Leave A Reply

Exit mobile version