சென்னை: கிறிஸ்தவ மக்கள் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் உள்ளிட்ட புனிதத் தலங்களுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நிதியுதவி / மானியம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மானிய விவரங்கள்:

  • கிறிஸ்தவர்களுக்கு மானியம்: 550 கிறிஸ்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ₹37,000/- மானியம் வழங்கப்படும்.
  • கன்னியாஸ்திரிகள் / அருட்சகோதரிகளுக்கு மானியம்: 50 கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ₹60,000/- மானியம் வழங்கப்படும்.
  • பணப்பரிவர்த்தனை முறை: தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மானியத் தொகை நேரடியாக ECS முறையின் கீழ் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

விண்ணப்பப் படிவம் பெறும் வழிகள்:

  • மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் இலவசமாக விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
  • அல்லது அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bcmbcmw.tn.gov.in வழியேயும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி & கடைசி நாள்:

  • முகவரி: ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டிடம், முதல் தளம்பே, சேப்பாக்கம், சென்னை – 600 005.
  • விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜனவரி 31, 2027.

புனிதப் பயணம் செல்ல விரும்பும் தகுதியான நபர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்துப் பயனடையுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version