தமிழ்நாட்டின் தூய்மை ஆற்றல் மற்றும் பசுமைப் பொருளாதார இலக்குகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், டாடா பவர் (Tata Power) நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவு, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் 100 மெகாவாட் (MW) திறன் கொண்ட புதிய சூரிய மின்சக்தித் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்து தொடங்கியுள்ளது.
இப்புதிய திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 24.06 கோடி யூனிட் தூய்மையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் டாடா பவர் நிறுவனத்தின் மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறன் 7 ஜிகாவாட்டைப் (GW) கடந்துள்ளது.
📌 மின்சார விநியோகப் பங்கீடு (Power Allocation):
கயத்தாறு சோலார் திட்டத்தின் மூலம் உற்பத்தியாகும் 100 மெகாவாட் மின்சாரம் கீழ்க்கண்ட நிறுவனங்களின் தொழிற்பாடுகளுக்காக வழங்கப்படவுள்ளது:
- 📱 டாடா எலக்ட்ரானிக்ஸ் (Tata Electronics): 53.125 மெகாவாட் (MW)
- ☀️ டிபி சோலார் (TP Solar – Tata Power Subsidiary): 40.625 மெகாவாட் (MW)
- 🏢 டாடா ரியாலிட்டி & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Tata Realty & Infrastructure): 6.25 மெகாவாட் (MW)
📌 சுற்றுச்சூழல் மற்றும் தொழிற்துறை நன்மைகள்:
- 🍃 கார்பன் உமிழ்வு குறைப்பு: இத்திட்டம் மூலம் ஆண்டுக்குக் பல்லாயிரக்கணக்கான டன் கார்பன் உமிழ்வு தவிர்க்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
- 🏭 தொழில்துறைக்குச் சீரான பசுமை மின்சாரம்: ஓசூரில் அமைந்துள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் திருநெல்வேலியில் உள்ள சோலார் உற்பத்தி ஆலைகளுக்குத் தேவையான சுத்தமான மின்சாரம் உறுதி செய்யப்படுகிறது.
- 🌟 1 டிரில்லியன் டாலர் இலக்கு: தமிழ்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சியைப் பசுமை ஆற்றல் கொள்கைகளுடன் இணைக்கும் மாநில அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இத்திட்டம் பெரும் ஆதரவாக அமையும்.

