உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் நெல் கொள்முதல் விலையை உயர்த்தி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

நடப்புக் கொள்முதல் பருவத்தில் (KMS 2026-2027) செப்டம்பர் 11, 2026 வரை 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உழவர்களுக்கு உரிய தொகைகள் உடனடியாக வழங்கப்பட்டு வருகின்றன.

📌 உயர்த்தப்பட்ட நெல் கொள்முதல் விலை :

  • 🌾 சன்ன ரக நெல்: குவின்டால் ஒன்றுக்கு ₹2,750/-
  • 🌾 பொது ரக நெல்: குவின்டால் ஒன்றுக்கு ₹2,600/-
  • 📦 கொள்முதல் அளவு: 11.09.2026 வரை 42,082 மெட்ரிக் டன் நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் வெற்றிகரமாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலனை முதன்மையாகக் கொண்டு, உயர்த்தப்பட்ட கொள்முதல் விலைகள் மூலம் தமிழக அரசு உழவர் பெருமக்களின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து உறுதுணையாகச் செயல்பட்டு வருகிறது!

Share.
Leave A Reply

Exit mobile version