மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பண்டிகைக் காலங்களில் மக்கள் சிரமமின்றிப் பயணம் செய்வதை உறுதி செய்யத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை தீவிர முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களின் தலைமையில், சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் (KCBT) உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று (14.09.2026) நடைபெற்றது.

📌 ஆய்வுக் கூட்டத்தின் முக்கிய அம்சங்கள் & முன்னேற்பாடுகள்:

  • 🛕 விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை சிறப்பு பேருந்துகள்: 2026-விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து, சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்குத் திரும்பும் பயணிகளின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துத் கழகங்கள் சார்பில் இயக்கப்பட்டு வரும் சிறப்புப் பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
  • 🪔 ஆயுத பூஜை & தீபாவளி பண்டிகை முன்னேற்பாடுகள்: வரவிருக்கும் 2026-ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் இயக்கப்படவுள்ள சிறப்புப் பேருந்துகள் மற்றும் கூடுதல் வசதிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
  • 📍 கிளாம்பாக்கம் முனைய ஆய்வு: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளுக்குத் தேவையான குடிநீர், நிழற்கூடம், உணவகத் தரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை தடையின்றிப் பராமரிக்க அதிகாரிகளுக்குத் தேவைப்படும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றித் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்ப ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை அனைத்துப் பாதுகாப்பு மற்றும் பயண வசதிகளையும் முழுவீச்சில் செய்து வருகிறது! 🚌✨

Share.
Leave A Reply

Exit mobile version