டெல்லியில் நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில்,முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் உரை
நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் உரையாற்றினார். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மகளிர் முன்னேற்றம், கல்வி மற்றும் சுகாதார சாதனைகள் குறித்து எடுத்துரைத்த அவர், நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், நிதிப் பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக திகழும் தமிழ்நாடு, தனது உழைத்த்தன்மையையும், தொழில் வளர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறது.
பெண்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுக்களானது சமூக வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார மாற்றத்திற்கான வலிமையான கருவிகளாக திகழ்கின்றன.
இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணி செய்யும் பெண்களில் 42% பெண்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
நிதிப் பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது.

