சென்னை (01.08.2026):
கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பால் உற்பத்தியைப் பெருக்கிச் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) சார்பாகக் கறவை மாடு வாங்குவதற்கான சிறப்பு நிதியுதவிக் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) / மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் நேரடியாக வழங்கப்படுகிறது.
💡 திட்டத்தின் முக்கிய நன்மைகள் & நிதியுதவி விவரம்:
- 🐄 மாடுகளின் எண்ணிக்கை: பால் பண்ணை தொடங்குவதற்காக ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 2 கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்க நிதியுதவி அளிக்கப்படும்.
- 💰 கடன் தொகை:
- ஒரு கறவை மாட்டிற்கு ரூ. 60,000 வீதம், அதிகபட்சமாக ரூ. 1,20,000 வரை கடன் வழங்கப்படும்.
- 📊 எளிய வட்டி & நிபந்தனைகள்:
- வருடாந்திர வட்டி விகிதம்: 7%
- பயனாலியின் பங்கு: 5%
- திருப்பிச் செலுத்தும் காலம்: 3 ஆண்டுகள்
📋 யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? (தகுதி வரம்புகள்):
- 👥 சமூகப் பிரிவு: பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சீர்மரபினர் (DNC) வகுப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
- 💵 வருமான வரம்பு: ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
- 🎂 வயது வரம்பு: 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- 🥛 கூட்டுறவு உறுப்பினர்: மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் கட்டாயம் உறுப்பினராக இருக்க வேண்டும்.
- 🏠 குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இக்கடனுதவி அளிக்கப்படும்.
📝 தேவைப்படும் ஆவணங்கள் & விண்ணப்பிக்கும் முறை:
- 📄 தேவையான சான்றிதழ்கள்:
- சாதிச் சான்றிதழ்
- வருமானச் சான்றிதழ்
- பிறப்பிடச் சான்றிதழ் (இருப்பிடம்)
- 🏢 விண்ணப்பிக்கும் இடம்: தகுதியுடைய நபர்கள் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) அல்லது தங்களது மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வாயிலாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

