சென்னை:
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இணையாக அவர்களின் மனநலனும், மன உறுதியும் மிக முக்கியம் என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஒரு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநலனைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும் “நட்புடன் உங்களோடு” திட்டத்தின் மூலம் கட்டணமில்லா மனநல ஆலோசனைச் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
உதவி எண்கள்:
📞 14416 (அல்லது) 104
யாரெல்லாம் தொடர்பு கொள்ளலாம்?
- மன அழுத்தம் மற்றும் பதட்டம்: தேர்வு பயம், மதிப்பெண்கள் குறித்த கவலை அல்லது குடும்பச் சூழலால் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்கள்.
- பயம் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள்: அன்றாட வாழ்வில் ஏற்படும் பயம், தாழ்வு மனப்பான்மை அல்லது மனநலம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
- பெற்றோர்களுக்கான ஆலோசனை: தங்களது பிள்ளைகளின் நடவடிகைகளில் மாற்றம் அல்லது அவர்களின் மனநிலையை எப்படிக் கையாள்வது என்று தவிக்கும் பெற்றோர்களும் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மனநல ஆலோசனை பெற எவ்விதத் தயக்கமும் வேண்டாம்! உங்களுக்கு உதவத் தமிழ்நாடு அரசு எப்போதும் தயாராக உள்ளது. மேற்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு மனரீதியான ஆலோசனைகளையும், தகுந்த தீர்வையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.


