தமிழகத்தின் புதிய அரசு குறித்து உடனடியாக விமர்சனங்கள் முன்வைப்பதை தவிர்க்க வேண்டும். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த அரசு அமைந்து இன்னும் சில நாட்கள்தான் ஆகின்றன. ஒரு புதிய நிர்வாகம் தன்னிச்சையாகச் செயல்பட சில மாதங்களாவது அவகாசம் கொடுக்க வேண்டும். அதற்குள்ளாகவே கேள்வி கேட்பது வேடிக்கையாக இருக்கிறது” என்றார்.

மேலும், அரசின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும், அதன் பிறகே குறை, நிறைகள் குறித்து விவாதிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசின் ஆரம்பகட்ட செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், செங்கோட்டையனின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

#Sengottaiyan #VijayGovernment #TamilNaduPolitics #PoliticalNews

Share.
Leave A Reply

Exit mobile version