பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் விதிகளை மீறி வெளியிடப்பட்ட 22 டெண்டர்களை ரத்து செய்து தமிழ்நாடு நீர்வளத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி நீர்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு பணிகளுக்கான டெண்டர்களில், அனைவரும் பங்கேற்கும் வகையிலான ‘ஓபன்’ (Open) டெண்டராக அறிவிக்கப்படாமல், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பயன்படும் வகையில் ‘லிமிடெட்’ (Limited) டெண்டராக வெளியிடப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. மேலும், விதிகளை மீறி ஒப்பந்ததாரர்களை நேரில் வரவழைக்கும் வகையிலான நிபந்தனைகளும் அதில் சேர்க்கப்பட்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இப்புகார்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், விதிகளை மீறி அறிவிக்கப்பட்ட அந்த 22 டெண்டர்களையும் முழுமையாக ரத்து செய்து நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

