புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
கூட்டத்தில் பேசிய அவர், “மாணவர்களின் எதிர்காலமே நமது அரசின் முதல் முன்னுரிமை. இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் மீண்டும் நடைபெறாத வண்ணம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மறுதேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகளும் காலதாமதமின்றி விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.
தேர்வு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்திலும் வெளியிலும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், பிரதமர் மோடியின் இந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

