புதுடெல்லி: உலக சுற்றுலா தினத்தை (World Tourism Day 2026) முன்னிட்டு, இந்திய சுற்றுலாத் துறையில் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஏற்படுத்தி வரும் பாரிய மாற்றங்கள் குறித்து மத்திய பத்திரிகைத் தகவல் அலுவலகம் (PIB India) சிறப்புக் கட்டுரையைப் பகிர்ந்துள்ளது.

இவ்வாண்டு உலக சுற்றுலா தினம் “சுற்றுலாவை மறுவடிவமைக்க டிஜிட்டல் நிகழ்ச்சிநிரல் மற்றும் செயற்கை நுண்ணறிவு” (Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism) என்ற உலகளாவிய கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகிறது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • இன்க்ரெடிபிள் இந்தியா டிஜிட்டல் தளம் (Incredible India Digital Platform): செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் இத்தளத்தின் வழியாகப் பயணிகளுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட தகவல்கள், நேரலை வானிலை நிலவரம் மற்றும் நாட்டின் பண்பாட்டு அனுபவங்கள் டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகின்றன.
  • கூகுள் இந்தியா கூட்டணி: சுற்றுலாத் துறையின் டிஜிட்டல் மேம்பாடு, தரவு அடிப்படையிலான திட்டமிடல் மற்றும் AI தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய சுற்றுலாத் துறை கூகுள் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • தேசிய டிஜிட்டல் சுற்றுலா ஸ்டேக் (NDTS): திறந்தநிலை டிஜிட்டல் கட்டமைப்பு மூலம் சுற்றுலாச் சேவைகளை எளிதாகவும், நம்பகமானதாகவும் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
  • பொருளாதாரப் பங்களிப்பு: சுற்றுலாத் துறை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5.22% பங்களிப்ப வழங்கி, சுமார் 8.46 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியத் தூணாகத் திகழ்கிறது.

பயணங்களைத் திட்டமிடுவது முதல் கலாச்சாரங்களை நேரில் அனுபவிப்பது வரை, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து டிஜிட்டல் சுற்றுலாத் துறையில் இந்தியா புதிய சகாப்தத்தைப் படைத்து வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version