சென்னை: கடினமான கணிதப் பாடம் இனி கதைகளின் வழியே மாணவர்களுக்கு எளிமையாகக் கற்பிக்கப்படும் என்று பாடத்திட்ட ஆலோசனைக்குழு கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பேசிய அவர், “நான் படிக்கும் காலத்தில் கணிதம் வராமல் அதிகமாக அடி வாங்கியுள்ளேன். மாணவர்களுக்குக் கணிதப் பாடம் மீதான பயத்தைப் போக்கும் வகையில், இனி கதைகளின் வழியே அது எளிமையாகக் கற்பிக்கப்படும்.
அத்துடன் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் ஆகியவை ஒருங்கிணைந்த ‘Steam Education’ முறை அறிமுகப்படுத்தப்படும். புதிய பாடத்திட்டமானது குழந்தைகளை மையப்படுத்திய கல்வியாகவும், அனைவருக்குமான கல்வியாகவும் சிறப்பாக மாற்றி அமைக்கப்படும்” என்று பேசினார்.

