சென்னை: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், திருக்குறுங்குடி கிராமத்தில் அமைந்துள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காகத் தண்ணீர் திறந்துவிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நீர்வளத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு இன்று (15.07.2026) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

  • கால்வாய்கள் மற்றும் தண்ணீர் அளவு:
    • கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் வள்ளியூரான்கால், படலையார்கால் மற்றும் ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெறும் 2,548.94 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்புகளுக்கு 16.07.2026 முதல் 31.10.2026 முடிய 108 நாட்களுக்கு, விநாடிக்கு 50 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • நீர்த்தேக்கத்திற்கு கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில், வடமலையான்கால் மூலம் பாசனம் பெறும் 3231.97 ஏக்கர் நிலங்களுக்கும் சேர்த்து விநாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
  • பயன்பெறும் பரப்பு: இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி மற்றும் இராதாபுரம் வட்டத்தில் உள்ள மொத்தம் 5,780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
Share.
Leave A Reply

Exit mobile version