தமிழ்நாடு அரசின் 2026-27ஆம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டுப் பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. கல்வித்துறை மற்றும் பள்ளி மாணவர் நலன்:

  • நவீன மிதிவண்டிகள் திட்டம்: “புதிய பயணம்.. புதிய வேகம்!” என்ற திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ஹேல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதியுடன் கூடிய நவீன மிதிவண்டிகள் வழங்க ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பெருந்தலைவர் காமராஜர் மாதிரிப் பள்ளிகள்: 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச கல்வி, உணவு, சீருடை மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய நவீன உண்டு-உறைவிடப் பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் (Super Clean, Super Campus): முதற்கட்டமாக 10,000 அரசுப் பள்ளிகளில் தினசரி தூய்மைப் பணிகள், குடிநீர் மற்றும் கழிப்பறை பராமரிப்புக்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பள்ளி நிறைவுத் திட்டம்: 3,734 அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கும் இத்திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது (மொத்த மதிப்பீடு ரூ.2,132 கோடி).
  • TN–SUDAR திட்டம்: ரூ.3,200 கோடி மதிப்பீட்டில் அரசு-தனியார் கூட்டாண்மை முறையில் 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள் மற்றும் 1 லட்சம் நவீன படுக்கை வசதிகள் உருவாக்கப்படவுள்ளன.
  • வெற்றி மடிக்கணினி திட்டம்: கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை:

  • புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள்: ‘Hub & Spoke’ மருத்துவமனை முறையில் 5 மண்டல புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3. மாற்றுத் திறனாளிகள் நலன்:

  • மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வு, மறுவாழ்வு மற்றும் கல்விக்காக ஒட்டுமொத்தமாக ரூ.1,485 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பராமரிப்பு மற்றும் பயிற்சி மையங்களாக ‘நம்பிக்கை இல்லம்’ அமைக்கப்படவுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version