முன்நிகழ்வு எஃகு கட்டடங்கள் (PEB – Pre-Engineered Buildings) மற்றும் கட்டமைப்பு எஃகு தீர்வுகள் (Structural Steel Solutions) வழங்குவதில் உலகளவில் முன்னனி வகிக்கும் ‘கெர்பி பில்டிங் சிஸ்டம்ஸ்’ (Kirby Building Systems) நிறுவனம், தமிழ்நாட்டின் திருச்சி அருகே உள்ள மணப்பாறையில் தனது 4வது உற்பத்தி ஆலையை அமைக்கும் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இப்புதிய தொழிற்சாலை வாயிலாகத் தமிழ்நாட்டின் தொழிற்துறை உற்பத்தித் திறன் மேலும் வலுப்பெறுவதோடு, மத்திய மண்டலப் பகுதியில் பெருமளவிலான வேலைவாய்ப்புகளும் உருவாகவுள்ளன.
📌 திட்டத்தின் முக்கியச் சிறப்பம்சங்கள்:
- 📍 அமைவிடம்: திருச்சி மாவட்டம், மணப்பாறை தொழிற்பேட்டை பகுதி.
- 🏭 உற்பத்தித் திறன்: இப்புதிய ஆலை ஆண்டிற்கு 1,00,000 மெட்ரிக் டன் (1,00,000 Metric Tonnes) உற்பத்தித் திறன் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
- 🗓️ வணிக ரீதியிலான இயக்கம்: கட்டமைப்புப் பணிகள் நிறைவடைந்து 2027-ஆம் ஆண்டின் பாதியில் (Mid-2027) வணிக ரீதியிலான உற்பத்தித் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 💼 பொருளாதார வளர்ச்சி & வேலைவாய்ப்பு: திருச்சியைச் சுற்றியுள்ள தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்குப் புதிய தொழிற்துறை வேலைவாய்ப்புகளை இத்திட்டம் உருவாக்கித் தரும்.
✨ தமிழ்நாட்டை ‘உற்பத்தித் துறையின் தலைநகரமாக’ (Manufacturing Hub) மாற்றும் நோக்கில் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இப்புதிய தொழில் முதலீடு பெரும் பக்கபலமாக அமையும்!

