நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கில், சென்னை குடும்ப நல நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
விவாகரத்து வழக்கு விசாரணையில் இருக்கும் வரை, தனக்கும் குழந்தைகளுக்கும் பராமரிப்புச் செலவுக்காக மாதம் ₹40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற ஆர்த்தியின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்:
- மாதம் ₹3 லட்சம் இடைக்கால ஜீவனாம்சம்:ஆர்த்தி கோரிய ₹40 லட்சம் கோரிக்கையைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், வழக்கு விசாரணை முடிவடையும் வரை ஆர்த்திக்கு மாதந்தோறும் ₹3 லட்சம் இடைக்கால ஜீவனாம்சமாக (Interim Maintenance) வழங்க ரவி மோகனுக்கு உத்தரவிட்டுள்ளது.
- குழந்தைகளைச் சந்திக்க அனுமதி:ரவி மோகன் தனது மகன்களான ஆரவ் மற்றும் அயானை எந்தவிதக் தடையும் இன்றிச் சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பின்னணி:
15 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, கடந்த ஆண்டு ரவி மோகன் மற்றும் ஆர்த்தி பிரிவதாக அறிவித்தனர். தொடர்ந்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர குற்றச்சாட்டுகளுடன் வழக்கு நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில், வழக்கு முடியும் வரை மாதம் ₹40 லட்சம் வழங்கக் கோரி ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த இடைக்காலத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

