கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் 2026 தொடரின் முதற்கட்ட அட்டவணை, வரும் மார்ச் 12-ம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 28-ல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், முதற்கட்டமாக முதல் 20 நாட்களுக்கான போட்டி விவரங்களை மட்டும் வெளியிட பிசிசிஐ (BCCI) திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களின் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாததே இந்தத் தாமதத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே, பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு மீதமுள்ள போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட அட்டவணையை வெளியிட அரசு மற்றும் பிசிசிஐ முடிவு செய்துள்ளன. இதனால் முதற்கட்ட அட்டவணையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ஆர்சிபி (RCB) அணிகள் மோதும் முக்கியப் போட்டிகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

மார்ச் 12-ம் தேதி வெளியாகும் இந்த அட்டவணையில், தொடக்க ஆட்டம் எந்த மைதானத்தில் நடைபெறும் என்பதும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும். தேர்தல் நடைபெறாத மாநிலங்களில் அதிகப் போட்டிகளை நடத்தவும், தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தேதிகளுக்கு ஏற்பப் போட்டிகளை மாற்றியமைக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version